சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்ட ஆலோசனைக் கூட்டம்
சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்ட ஆலோசனைக் கூட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஜவுளித்தொழில் அமைப்புகள் மற்றும் தொழில் முனைவோர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- திண்டுக்கல் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்க விருப்பம் உள்ள தொழில்முனைவோர்கள், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் துணி நூல் துறை மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தில் மண்டல துணை இயக்குநரை நேரிலோ அல்லது தொலைபேசி எண்-0421 2220095, வாயிலாகவோ தொடர்புகொண்டு விபரங்களை அறிந்து பயன்பெறலாம். எனவே, சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை திண்டுக்கல் மாவட்டத்தில் பயன்படுத்தி தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும் அனைத்து தொழில்முனைவோரும் முன்வர வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் கமலக்கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) கோட்டைக்குமார், மண்டல துணை இயக்குநர்(துணி நுால் துறை) இராகவன், ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள், ஜவுளி தொழில்முனைவோர்கள் பலர் கலந்துகொண்டனர்.