வேம்பார்பட்டியில் உணவு பாதுகாப்பு திட்ட விழா

வேம்பார்பட்டியில் உணவு பாதுகாப்பு திட்ட விழா

Update: 2024-08-02 14:14 GMT
திண்டுக்கல் அருகே உணவு பாதுகாப்பு திட்ட விழா நடந்தது.திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகேயுள்ள வேம்பார்பட்டியில் தமிழ்நாடு நலிவுற்ற பெண்கள்,குழந்தைகள் உணவு பாதுகாப்பு விழா நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள வேம்பார்பட்டியில் தமிழ்நாடு நலிவுற்ற பெண்கள்,குழந்தைகள் உணவு பாதுகாப்பு திட்ட விழா நடைபெற்றது.இதற்கு டி.எம்.எஸ்.எஸ் இயக்குனர் அருட்தந்தை ஜான் நெப்போலியன், வேம்பார்பட்டி அருட்தந்தை நிர்மல் சூசைராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.நிகழ்ச்சியில் வேம்பார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி,ஊராட்சி செயலர் மார்ட்டின் கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் செவிலியர்கள் அசுந்தா மேரி,சந்திரா,நித்யா மற்றும் டி.எம்.எஸ்.எஸ் திட்ட பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.இந்த நிகழ்ச்சியில் 50 கர்ப்பிணி பெண்களுக்கும்,150 குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து அடங்கிய பொருள்கள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியை திட்ட பணியாளர் அருள் சகாயராணி தொகுத்து வழங்கினார்.நிறைவாக திட்ட பணியாளர் பொக்கிஷம் நன்றி கூறினார்.

Similar News