மயிலாடுதுறை துலா கட்ட காவிரியில் ஆடிப்பெருக்கிற்கு நிலத்தடி நீர்
மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரிநீர் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஆடிப்பெருக்குவிழாவை பொதுமக்கள் கொண்டாட போர்வெல் வாட்டர் நிரப்பும்பணி தீவிரம். மயிலாடுதுறை நகராட்சி மற்றும் நாட்டுநலப்பணி திட்ட மாணவிகள் துய்மை பணி மேற்கொண்டனர்
தமிழகம் முழுவதும் நாளை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படவுள்ள நிலையில் மேட்டூரில்’ திறக்கப்பட்ட காவிரிநீர் மயிலாடுதுறை மாவட்டத்திற்’கு வந்து சேராததால் பொதுமக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஆண்டு மேட்டூர் அணை நிரம்பி கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட உபரிநீர் மயிலாடுதுறை மாவட்டம் வந்தடைந்து கடலில் கலந்து வருகிறது. இந்நிலையில் திருச்சி கல்லணையிலிருந்து காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டம் வந்துசேரமால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளில் தண்ணீர் இல்லாததால் நாளை ஆடிப்பெருக்குவிழாவை நீர்நிலைகளில் பொதுமக்கள் கொண்டாடமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாளை ஆடிப்பெருக்கு விழாவை பொதுமக்கள் கொண்டாடுவதற்காக மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகத்தினர் காவிரி புஷ்கர தொட்டியில் போர்வெல் மூலம் தண்ணீர் நிரப்பி வருகின்றனர். மேலும் நகராட்சி நிர்வாகத்தினருடன் சேர்ந்து மயிலாடுதுறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் காவிரி புஷ்கர தொட்டியில் தூய்மை பணியை மேற்கொண்டனர்.