எம் ஆர் விஜயபாஸ்கர் மீது பொய் வழக்கு புனைந்து கைது செய்ததற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கரூரில் கண்டனம்.
எம் ஆர் விஜயபாஸ்கர் மீது பொய் வழக்கு புனைந்து கைது செய்ததற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கரூரில் கண்டனம்.
எம் ஆர் விஜயபாஸ்கர் மீது பொய் வழக்கு புனைந்து கைது செய்ததற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கரூரில் கண்டனம். தமிழக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம் ஆர் விஜயபாஸ்கர் மீது சுமார் 100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து மூன்றாவது முறையாக ஜாமீன் கேட்டு முறையிட்டதில் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கரூரில் உள்ள எம் ஆர் விஜயபாஸ்கர் இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினார். இந்த நிகழ்ச்சியின் போது அதிமுக ராஜ்யசபா உறுப்பினர் தம்பிதுரை, அதிமுக முன்னாள் அமைச்சர்கள், புதுக்கோட்டை விஜய் பாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள், வருகை தந்தனர். பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, எம் ஆர் விஜயபாஸ்கர் மீது திட்டமிட்டு புனையப்பட்ட பொய் வழக்கு இது. கரூர் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதால்,அதனை மறைக்கும் பொருட்டு, இந்த பொய் வழக்கு புனையப்பட்டுள்ளதாகவும், இதற்கு தனது வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதாகவும் தெரிவித்தார். .