மனித கழிவுநீர்! சாலையில் சென்று குட்டை போல் காட்சியளிக்கும் அவலம்!
திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பிடத்திலிருந்து வெளியேறும் மனித கழிவுநீர்! சாலையில் சென்று குட்டை போல் காட்சியளிக்கும் அவலம்!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பிடத்திலிருந்து வெளியேறும் மனித கழிவுநீர்! சாலையில் சென்று குட்டை போல் காட்சியளிக்கும் அவலம்! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்திற்கு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளி மாநிலங்களில் இருந்தும் மாவட்டங்களில் இருந்தும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் திருப்பத்தூர் நகராட்சியால் டெண்டர் விடப்பட்ட கட்டண கழிப்பிடம் உள்ளது. மேலும் இந்த கட்டணக் கழிப்பிடத்தை ஒரு நாளைக்கு சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் உபயோகித்து வருகின்றனர் இந்த கட்டண கழிப்பிடத்தில் முறையான செப்டிக் டேங்க் இல்லாததால் அருகே உள்ள கால்வாயில் பைப் அமைத்து மனிதக் கழிவுகள் வெளியேறும் அவல நிலை உள்ளது. இதன் காரணமாக மனிதக் கழிவுகள் உடன் கலந்த கழிவு நீர் பேருந்துகள் வெளியே வரும் முக்கிய பிரதான சாலையில் பெருக்கெடுத்து ஓடி குட்டைப் போல் காட்சியளிக்கிறது. மேலும் அருகே உள்ள கடைகளுக்குள் செல்லும் நிலையம் ஏற்படுகிறது இதன் காரணமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அந்த கழிவுநீரை மிதித்து கடந்து செல்லும் அவல நிலையம் ஏற்படுகிறது. மேலும் இப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் மூக்கை பொத்தி செல்லும் அழவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் தொற்றும் அபாயம் இருப்பதால் இது குறித்து நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது...