பள்ளத்தில் இறங்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
பள்ளிபாளையம் பிரதான சாலையோரத்தில் கனரக லாரி இறங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் தனியார் காகித ஆலையிலிருந்து பேப்பர் கட்டுகளை ஏற்றிக்கொண்டு, தருமபுரி அடுத்துள்ள அரூர் பகுதியை சேர்ந்த காமராஜர் என்ற லாரி ஓட்டுநர் பெங்களூர் நோக்கி செல்வதற்காக பள்ளிபாளையம் வந்தார். அப்பொழுது ஆர்எஸ் ரோடு பிரிவு என்ற பகுதி அருகே எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் உள்ள சாக்கடை கால்வாய் பள்ளத்தில் லாரியின் பின் நான்கும், கவிழ்ந்ததால் மேற்கொண்டு வாகனத்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இரவு தொடங்கி காலை வரையிலும் வாகனத்தை மீட்கும் முயற்சியில் லாரி ஓட்டுனரும் உள்ளூர் பொதுமக்களும் தீவிரமாக ஈடுபட்ட நிலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் லாரியை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் லாரியானது பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டது. பிரதான சாலையில் சாலையோர பள்ளத்தில் கனரக லாரி பள்ளத்தில் இறங்கியதால் பிரதான சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் செல்ல முடியாமல் நீண்ட தூரங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.