முத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
முத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. வெள்ளகோவில் காவல் உதவி ஆய்வாளர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
முத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று காலை நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜி வேல்முருகன் தலைமை தாங்கினார். இதில் வெள்ளகோவில் காவல் உதவி ஆய்வாளர் மோகன்ராஜ், திருவேங்கடம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் உடல்நலத்துக்கு ஏற்படும் பாதிப்புகள், புகையிலை பொருட்களால் ஏற்படும் பல்வேறு நோய்கள், உடல், மனம், ஆரோக்கியம் பாதிப்பு நிலைகள் புகையிலைப் பொருட்களை சமுதாயத்திற்கு ஏற்படும் தீமைகள் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கும் வழிமுறைகள் போதைப் பொருட்களை ஒழிப்பதன் அவசியம் வாழ்வியல் நெறிமுறைகளை கடைப்பிடித்து வாழும் வழிமுறைகள் பற்றி மாணவ மாணவிகளுக்கு விரிவாக விளக்கிக் கூறினார்கள் முடிவில் ஆசிரியைகள் மாணவ மாணவிகள் ஒன்று இணைந்து புகையிலை போதைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.