நாளை மறுநாள் போர்வெல் கண்காட்சி துவக்கம்

நாளை மறுநாள் போர்வெல் கண்காட்சி துவக்கம்

Update: 2024-08-14 13:49 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் சுமார் 15000 மேற்பட்ட போர்வெல் வண்டிகள் இந்தியா முழுவதும் இயக்கப்பட்டு வருகிறது.கடந்த நான்காண்டுகளாக திருச்செங்கோடு போர்வெல் உரிமையாளர்கள் நவீன தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ளும் வகையில் இந்தியா முழுவதிலும் இருந்து போர்வெல் தொழில்நுட்பம் தொடர்பாக பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் தற்போதைய தொழில்நுட்பம் குறித்து விளக்கி கூறப்பட உள்ளது. இந்த கண்காட்சி ஆகஸ்ட் மாதம்16,17,18ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் கலந்து கொண்ட போர்வெல் இன்ஜினியரிங் மற்றும் சர்வீஸ் சென்டர் சங்கத்தை சேர்ந்த பொருளாளர் சீனிவாசன் கூறும்போது திருச்செங்கோட்டில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரிக் வாகனங்கள் இந்தியா முழுவதும் இயக்கப்பட்டு வருகிறது இவர்கள் புதிய தொழில்நுட்பத்தை தெரிந்து கொள்ளும் வகையில் அகில இந்திய அளவில் தொழில்நுட்ப கண்காட்சி வரும் 16,17,18 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது இந்த கண்காட்சிகளில் புதிய தொழில்நுட்பம் தொடர்பான பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டு காட்சி படுத்தப்பட உள்ளது உத்தரகாண்ட் மாநிலத்தில் தொழிலாளர்களை மீட்பதற்கு உதவியாக இருந்தது திருச்செங்கோடு PRD நிறுவனத்தின் தொழில்நுட்பம் என்பதை நாடு மறக்காது அது போன்று புதிய வகை போர்வெல் இயந்திரங்கள் தற்போது 1500 அடி வரை போர்வெல் போட முடியும் இந்த கண்காட்சியில் இரண்டாயிரத்தில் இருந்து 3000 அடி வரை துளையிடும் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என்று கூறினார் இந்த செய்தியாளர் சந்திப்பின்போது திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்கத்தினர் திருச்செங்கோடு ரிக் இன்ஜினியரிங் மற்றும் சர்வீஸ் சென்டர் சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்

Similar News