மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிகளை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் வையப்பமலையில் ஆர்ப்பாட்டம்

மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிகளை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் வையப்பமலையில் ஆர்ப்பாட்டம்

Update: 2024-08-14 14:13 GMT
திருச்செங்கோடு அருகே வையப்பமலை மணலி பிரிவு ரோட்டில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் . மேற்குவங்க மாநிலம் கல்கத்தாவில் மருத்துவ மாணவியை கும்பலாக ஒன்று சேர்ந்து பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்துள்ளனர் செய்த குற்றவாளிகளை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டுள்ளது அதன் ஒரு பகுதியாக வையப்பமலையில் நடைபெற்ற போது மெழுகுவர்த்தி ஏந்தி மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் பழனியம்மாள் தலைமை வகித்தார் ஒன்றிய தலைவர் சாந்தி.செயலாளர் மோகனப்பிரியா. மாவட்ட குழு உறுப்பினர் செல்லம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Similar News