வெள்ளகோவில் மற்றும் காங்கேயத்தில் காற்றுடன் மிதமான மழை
வெள்ளகோவில் மற்றும் காங்கேயத்தில் காற்றுடன் மிதமான மழை. இரு இடங்கலிலும் 3 மில்லி மீட்டர் மழை பெய்ததாக பதிவாகி இருந்தது
வெள்ளகோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று வெயில் காரணமாக காலை முதல் மாலை வரை உஷ்ணமாக இருந்தது. பின்னர் இரவு 7 மணி அளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 8 மணிக்கு ஆரம்பித்த மழை படிப்படியாக அதிகரித்து தொடர்ந்து மிதமான மழை ஒரு மணி நேரம் காற்றுடன் பெய்ததால் வெள்ளகோவில் நகரின் தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியது. பள்ளமான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளகோவில், முத்தூர், வள்ளியரச்சல், மேட்டுப்பாளையம், மாந்தபுரம், பாப்பம்பாளையம், அண்ணா நகர், குருக்கத்தி, புதுப்பை, லக்ன நாயக்கன்பட்டி, தாசநாயக்கன்பட்டி, கம்பளியம்பட்டி, கல்லமடை பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இரவில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை காணப்பட்டது. இதே போல் காங்கேயம் நகர் பகுதியில் இரவு 8 மணிக்கு பெய்த மழை 1 மணி நேரத்துக்கு மேலாக மிதமான மழை பெய்தது. காங்கேயத்தில் 3 மில்லி மீட்டரும், வெள்ளக்கோவிலில் 3 மில்லி மீட்டரும் மழை பதிவாகியிருந்தது .