வெள்ளகோவிலில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது

வெள்ளகோவில் பகுதிகளில் மூன்று நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்தவரை வெள்ளகோவில் காவல்துறையினர் கைது செய்தனர்

Update: 2024-08-15 16:30 GMT
வெள்ளகோவில் காவல் உதவி ஆய்வாளர் சந்திரன் இரவு தீவிரது ரோந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.  அப்போது புதுப்பை பேருந்து நிறுத்தத்தில் உள்ள ஒரு பேக்கரி அருகில் மூன்று நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த மூர்த்தி (47) கைது செய்யப்பட்டார். இவர் வெளிமாநில லாட்டரி சீட்டின் கடைசி மூன்று எண்கள் எழுதிய துண்டு சீட்டை ரூ. 50 க்கு விற்பனை செய்து வந்ததும் குலுக்கல் விவரத்தை ஆன்லைனில் தெரிவித்து வந்ததும் தெரிய வந்தது அவரிடம் இருந்து ரூ.350 பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News