கோட்டூர் பேரூராட்சியில் திமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்.,
பொள்ளாச்சி அருகே கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தில் பல்வேறு ஊழல்களை செய்து வருவதாக கூறி திமுக பேரூராட்சி தலைவரை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து போராட்டம்.,
பொள்ளாச்சி அருகே கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தில் பல்வேறு ஊழல்களை செய்து வருவதாக கூறி திமுக பேரூராட்சி தலைவரை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து போராட்டம்.., பொள்ளாச்சி.. ஆகஸ்ட்..16 பொள்ளாச்சியை அடுத்துள்ள கோட்டூர் பேரூராட்சியில் 21 வார்டுகள் உள்ளது, இந்த பேரூராட்சியில் தலைவராக திமுக சேர்ந்தவர் ராமகிருஷ்ணனை பதவி வைத்து வருகிறார்., அதேபோல் திமுகவைச் சேர்ந்த 12 கவுன்சிலர்கள் கோட்டூர் பேரூராட்சியில் உள்ளனர்., நிலையில் கோட்டூர் பேரூராட்சியில் ஒப்பந்தம் மற்றும் டென்டரில் முறைகேடு நடைபெறுவதாகவும், வரவு செலவுகளை கணக்குகள் சரிவர சமர்ப்பிப்பதில்லை எனக் கூறி கோட்டூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெசிமா பானுவிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளே அமர்ந்து திமுக கவுன்சிலர்கள் திமுக பேரூராட்சி தலைவர் ராமகிருஷ்ணனை மாற்ற வேண்டுமென கோஷங்கள் இட்டு திமுகவைச் சேர்ந்த 12 கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்., ஆளும் கட்சி உறுப்பினர்களே,ஆளும் கட்சி தலைவருக்கு எதிராக போராட்த்தில் ஈடுப்பட்டு வருவதால் கோட்டூர் பேரூராட்சியில் பரபரப்பு ஏற்ப்டுள்ளது.,