மல்பெரி சாகுபடி வெண்பட்டு புழு வளர்ப்பு விவசாயிகள் பயிற்சி.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே மல்பெரி சாகுபடி பெண் பட்டுப்புழு வளர்ப்பு தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது
சிவகங்கை அருகே சக்கந்தி கிராமத்தில் பட்டு வளர்ச்சி துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை, (அட்மா திட்டம்) விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் மல்பரி சாகுபடி வெண்பட்டு புழு வளர்ப்பு விவசாயிகள் பயிற்சி பட்டு உதவி ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது. பட்டு வளர்ப்பு மல்பெரி சாகுபடி, பட்டுப்புழு வளர்ப்பு, முறை, பூச்சி மேலாண்மை, நோய் மேலாண்மை, வெண்பட்டு புழு வளர்ப்பு தொழில்நுட்பங்கள் பற்றி முத்துக்குமார் விளக்கி கூறினார். பட்டு இளநிலை ஆய்வாளர் சேக் ஆசிப் பட்டு வளர்ப்பு அறைகள், பராமரிப்பு முறைகள், இளம் புழு வளர்ப்பு முறைகள், பட்டு வளர்ச்சி துறையின் மூலம் செயல்படுத்தும் திட்டங்கள் பற்றியும் எடுத்துக் கூறினார். இப்பயிற்சியினை அட்மா திட்ட உதவி தொழில் மேலாளர் ராஜா ஏற்பாடு செய்திருந்தார். 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.