முத்துமாரியம்மன் கோவிலில் யாகசாலை பூஜை

இளையான்குடி அருகே தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு யாகசாலையுடன் விழா தொடங்கியது

Update: 2024-08-19 11:10 GMT
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் மிகவும் பிரஸ்தி பெற்றதாகும் இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதம் 10 நாட்கள் பொங்கல் விழா பெறுவது வழக்கம். இந்நிலையில் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆக., 22 ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. அதற்காக இன்று யாகசாலை பூஜை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஆக., 22ல் காலை 8:00 மணியில் இருந்து 9:15 மணிக்குள் கோபுர கலசங்களில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி, கும்பாபிேஷகத்தை நடத்தி வைக்கின்றனர். பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் தலைமையில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Similar News