பொள்ளாச்சி பிஏபி அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம்.,

பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட கால்வாய்களில் தண்ணீர் திருட்டை தடுக்க வலியுறுத்தியும், திருமூர்த்தி அணையில் இருந்து உப்பாறு பகுதியில் உள்ள குளம், குட்டைகளுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும், என கூறியும் பிஏபி அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம்.,

Update: 2024-08-20 10:58 GMT
பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட கால்வாய்களில் தண்ணீர் திருட்டை தடுக்க வலியுறுத்தியும், திருமூர்த்தி மலை அணையில் இருந்து உப்பாறு பகுதியில் உள்ள குளம், குட்டைகளுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும், என கூறி பொள்ளாச்சியில் உள்ள கண்காணிப்பு செயல் பொறியாளர் அலுவலகத்தில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்., பொள்ளாச்சி.. ஆகஸ்ட்.,20 மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழையானது தொடர்ந்து பெய்து வந்த நிலையில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள சோலையார் பரம்பிக்குளம் ஆழியார் மற்றும் உடுமலை திருமூர்த்தி அணை என ஆனைகள் அனைத்தும் நிரம்பியது., இதனைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்திற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது., இந்த நிலையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள கால்வாய்களில் பாசன தண்ணீர் திருடப்பட்டு வருவதாக கூறி உப்பாறு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பொள்ளாச்சியில் உள்ள பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட கண்காணிப்பு செயற்பொறியாளர் அலுவலகத்தில் நேற்று முதல் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்., ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனக் கூறியும் உப்பாறு பகுதியில் உள்ள குளம், குட்டைகளுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும், தண்ணீர் திருட்டை தடுக்க வேண்டும் என கூறி இன்று காலை முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்துடன் உண்ணாவிரத போராட்டத்திலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்., இதனால் கண்காணிப்பு செயற்பொறியாளர் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது., தண்ணீர் திருட்டை செயற்பொறியாளர் மற்றும் திட்டக்குழு தலைவர்கள் தடுக்காமல் இருப்பதாகவும், எனவே தண்ணீர் திருட்டை தடுத்து, முறையாக தண்ணீர் பாசனத்திற்கு வழங்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்., பேட்டி-வேலுசிவகுமார் உப்பாறு விவசாயி.

Similar News