துர்நாற்றத்தால் ஊரைவிட்டு வெளியேறும் கிராம மக்கள்

சிவகங்கை அருகே ஊர் பகுதியில் இறந்த கோழிகளை கொட்டியதால் துர்நாற்றம் வீசி மக்கள் ஊரை காலி செய்யும் சூழல் உள்ளது

Update: 2024-08-21 04:11 GMT
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே மாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்டது நாட்டாகுடி கிராமம். மாத்தூர், நாட்டாக்குடி, சித்தலூர், இளங்குடி உள்ளிட்ட கிராமங்கள் உள்ள இப்பகுதியில் சுமார் 400 ஏக்கரில் விவசாயமும் நடந்து வருகிறது. நாட்டாகுடி செல்லும் சாலையில் உள்ள கால்வாயில் 500க்கும் மேற்பட்ட மடிந்த கோழிகளை கொட்டிச் சென்றதால் ஊரே துர்நாற்றம் வீசுகிறது துர்நாற்றத்தால் உணவு அருந்த முடியாமலும் தூக்கம் இன்றி தவித்து வருகின்றனர். இதனால் ஊரில் இருந்து பல குடும்பங்கள் சிவகங்கை பகுதியில் உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். ஏற்கனவே நாட்டாகுடியில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடிய நிலையில் உப்பாறறில் சென்று அகப்பை வைத்து காத்திருந்து தண்ணீர் எடுத்துச் சென்ற நிலை மாறி ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் வசதி அமைத்து கொடுத்ததால் கிராமத்தில் நிம்மதியோடு வாழ்ந்து வந்த இந்த கிராம மக்களுக்கு தற்போது கோழி கழிவுகளையும் இறந்த கோழிகளையும் அந்தப் பகுதியில் கொட்டி செல்வதால் கிராமமே துர்நாற்றம் வீசுகிறது. இதனை அரசு உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் கொட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Similar News