பழுது அடைந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்

சிவகங்கை மாவட்டத்தில் 2024 பாராளுமன்ற தேர்தலின் போது பழுது அடைந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் உரிய நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது

Update: 2024-08-21 15:55 GMT
சிவகங்கை மாவட்டம், பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024, பழுதடைந்த 02 BALLOT UNIT கள், 04 CONTROL UNIT கள் மற்றும் 10 VVPAT இயந்திரங்கள் ஆகியவைகளை, பெங்களூர் பெல் நிறுவனத்திற்கு அனுப்பும் பொருட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கிலிருந்து பிரித்து எடுக்கும் பணி, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காஞ்சிரங்கால் பகுதியில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024லின் போது பழுதடைந்த இரண்டு BALLOT UNITகள், நான்கு CONTROL UNITகள் மற்றும் 10 VVPAT இயந்திரங்களையும் பெங்களூர் பெல் நிறுவனத்திற்கு அனுப்பும் பொருட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைப்பறையில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மேற்படி எண்ணிக்கையிலான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரித்து எடுக்கப்பட்டன. மேலும், சென்ற உள்ளாட்சி தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட 2008, 2009 ஆம் ஆண்டு M2 வகை இயந்திரங்கள் BU- 305, CU-555 என மொத்தம் 860 எண்ணிக்கையிலான இயந்திரங்களின் காலாவதி தேதி முடிவடைந்து விட்டதால் அவற்றை அழிக்கும் பொருட்டு பெங்களூரு பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில், தேர்தல் வட்டாட்சியர் மேசியாதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News