மக்களுடன் முதல்வர் திட்டம் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குறிப்பிட்டு தேதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

Update: 2024-08-21 23:20 GMT
சிவகங்கை மாவட்டத்தில் ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் வருகின்ற 23.08.2024 அன்று எஸ்.புதூர் வட்டாரத்திற்குட்பட்ட 08 கிராமங்களுக்கும், காளையார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட 10 கிராமங்களுக்கும் மற்றும் இளையான்குடி வட்டாரத்திற்குட்பட்ட 11 கிராமங்களுக்குமான முகாம்கள் குறிப்பிட்ட இடங்களில் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஊரக பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில், கடந்த 11.07.2024 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற 23.08.2024 அன்று ”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் எஸ்.புதூர் வட்டாரத்திற்குட்பட்ட புழுதிப்பட்டி, தர்மபட்டி, கொண்டபாளையம், கே.புதுப்பட்டி, கரிசல்பட்டி, கீழவயல், மணலூர், முசுண்டபட்டி ஆகிய கிராமங்களுக்கென முசுண்டப்பட்டி சமுதாயக்கூட்டத்திலும், காளையார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட மறவமங்கலம், சிரமம், சிலுக்கப்பட்டி, வேளாரேந்தல், உசிலங்குளம், சேதாம்பல், மேலமருங்கூர், ஏரிவயல், இலந்தைக்கரை, மாரந்தை ஆகிய கிராமங்களுக்கென மறவமங்கலம் மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடத்திலும் மற்றும் இளையான்குடி வட்டாரத்திற்குட்பட்ட சாலைகிராமம், முத்தூர், காட்டனூர், அளவிடங்கான், புதுக்கோட்டை, பூலாங்குடி, சாத்தனூர், சமுத்திரம், வண்டல், விசவனூர், சீவலாதி ஆகிய கிராமங்களுக்கென சாலைகிராமம், உடையார் திருமண மண்டபத்திலும் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை மேற்குறிப்பிட்டுள்ள இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளது. இம்முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, எரிசக்தித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் என மொத்தம் 13 துறைகள் தொடர்பான சேவைகள் குறித்த மனுக்களை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Similar News