பள்ளங்கள் நிறைந்த தேசிய நெடுஞ்சாலை வாகனம் ஓட்டிகள் அவதி
சிவகங்கை மேம்பாலத்தில் இருந்து அரண்மனை வாசல் வரை செல்லும் ரோட்டில் ஆங்காங்கே சேதம் அடைந்து குழிகளாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
சிவகங்கை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் அரண்மனை வாசல் பகுதியில் இருந்து அரசு போக்குவரத்து கழக பணிமனை வரை 2 கி.மீ.,துாரமுள்ள சாலை ஆங்காங்கே சேதம் அடைந்து பள்ளங்களாக உள்ளது. நகராட்சி அலுவலகம் அருகே உள்ள மேம்பாலத்தின் மேல்பகுதியில் கான்கிரீட் பெயர்ந்து கம்பி வெளியே தெரிகிறது. பிள்ளைவயல் காளியம்மன் கோயில் ஆர்ச் முன்பு,சண்முகராஜ கலையரங்கம் அருகிலும் ரோடு சேதம் அடைந்து குழியாக காட்சியளிக்கிறது. இந்த வழியாக வேகமாக வரும் வாகனங்கள் இந்த பள்ளத்தில் இறங்கி செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.டூவீலர்களின் பின்னால் அமர்ந்து வருபவர்கள் ஓட்டுபவரை நன்கு பிடித்துக்கொள்ளாவிட்டால் இந்த பள்ளத்தை கடக்கும்போது தவறி கீழே விழ வாய்ப்புள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் மேம்பாலம் முதல் அரண்மனை வரை உள்ள பள்ளங்களை சரிசெய்ய வேண்டுமென வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.