மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம்
சிவகங்கை மாவட்டம், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் கண்காணிப்பு குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம் தலைமையில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் முன்னிலையில் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் முன்னிலையில், கண்காணிப்பு குழு தலைவரும், சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினருமான கார்த்தி ப சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தேசிய சுகாதார இயக்கம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா, சமக்ர சிக்ஷா, தேசிய சமூக உதவித் திட்டம், தேசிய நெடுஞ்சாலைகள் திட்டம், பிரதம மந்திரி வேலை வாய்ப்புத் திட்டம், தீன்தயாள் - அந்தியோதயா யோஜனா, சத்துணவுத் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் (கிராமம்), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தூய்மை பாரத இயக்கம் - (கிராமம்), பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டம், நபார்டு, பிரதம மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா, பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் அபிவிருத்தி திட்டம், ஜல் ஜீவன் மிஷன், 15-வது மத்திய நிதிக்குழு மானிய திட்டம், Plant 4 Mother and ஏக் பெத் மா கே நாம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் பணியாளர்கள் விபரம் உள்ளிட்டவைகள் மற்றும் மேற்கண்ட துறைகள் சார்ந்த திட்ட செயல்பாடுகள் தொடர்பாகவும், ஒன்றிய, மாநில அரசின் பல்வேறு துறைகள் ரீதியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அதன் பயன்கள், நிதிநிலை, மற்றும் செலவினங்கள் ஆகியன குறித்தும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆகியன குறித்தும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில், கண்காணிப்பு குழு தலைவரான சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டது. மேலும், இக்கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள், தங்களது துறைகள் ரீதியாக மேற்கொண்ட பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், தேவையான நிதி நிலைகள் ஆகியன தொடர்பாக ஆண்டறிக்கையின்படி, விரிவாக எடுத்துரைத்தனர். அதனைத்தொடர்ந்து, சிவகங்கை மாவட்டத்தில் ஒன்றிய அரசின் அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் முழுமையாக நிறைவேற்ற ஒன்றிய அரசின் சம்பந்தப்பட்ட துறை செயலாளர்களை பரிந்துரை செய்து, தேவையான நிதி மற்றும் சலுகைகளை பெற்றுத் தருவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மக்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்துத்துறை அலுவலர்கள் முனைப்போடு செயல்பட வேண்டும் என கண்காணிப்பு குழு தலைவரான சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம் அறிவுறுத்தினார் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.மாங்குடி அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், மகளிர் திட்ட இயக்குநர் கவிதப்பிரியா மற்றும் நகர் மன்றத்தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்கள், நகராட்சி ஆணையாளர்கள், அனைத்துத்துறை முதல்நிலை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.