பொள்ளாச்சி சார் - ஆட்சியர் அலுவலகத்தை பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முற்றுகையிட்டு மனு.,
பொள்ளாச்சி அருகே மழையால் சேதமடைந்த அரசு தொடக்கப்பள்ளியில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் தரமில்லாமல் மேற்கொள்வதாக கூறி பொள்ளாச்சி சார்- ஆட்சியர் அலுவலகத்தில் மாணவ மாணவிகள் பெற்றோருடன் முற்றுகை.,
பொள்ளாச்சி அருகே மழையால் சேதமடைந்த அரசு தொடக்கப்பள்ளியில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் தரமில்லாமல் மேற்கொள்வதாக கூறி பொள்ளாச்சி சார்- ஆட்சியர் அலுவலகத்தில் மாணவ மாணவிகள் பெற்றோருடன் முற்றுகை., பொள்ளாச்சி.. ஆகஸ்ட்.,23 கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூர் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது, பழமை வாய்ந்த இந்த பள்ளிக்கூடத்தில் 29 மாணவர்கள் பயின்று வருகின்றனர்., இந்த பள்ளியின் மேற்கூரை ஓடுகள் உடைந்தும், சுவர்கள் பலம் இல்லாமலும் இருந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக தொடக்கப்பள்ளியின் உடைந்த மேற்கூரையில் இருந்து ஒழுகிய மழை நீர் பள்ளிக்குள் தேங்கி நின்றது மேலும் பலம் இல்லாமல் காணப்படும் சுவர்களில் மழைநீர் கசிவு காரணமாக எப்போது வேண்டுமானாலும் விழும் நிலை ஏற்பட்டது பராமரிப்பு இல்லாமல் காணப்படும் இந்தப் பள்ளியை சீரமைக்க கல்வித்துறை அதிகாரியிடம் பெற்றோர்கள் முறையிட்டனர் இதனையடுத்து பள்ளியை சீரமைத்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டது., தற்போது பள்ளியின் மேற்கூறையை அகற்றி பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது புதிதாக மரம் மற்றும் ஓடுகளை கொள்முதல் செய்யாமல் பழைய மரம் மற்றும் ஓடுகளை பயன்படுத்துவதாக கூறி இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர்கள் மாணவ மாணவிகளுடன் வந்து முற்றுகையிட்டனர்., காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து முற்றுகையை கைவிட்டு சார் - ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தனர் தரமில்லாமல் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகளால் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சமாக இருப்பதாகவும், இதனால் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாகவும் தெரிவித்த பெற்றோர்கள், பள்ளியை மிகுந்த பாதுகாப்புடன் சீரமைத்து நல்ல கல்வி வழங்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்., பேட்டி- 1.திவ்யா, பள்ளி மாணவியின் பெற்றோர் நல்லூர்.,