ராட்சத அலையில் அடித்து செல்லப்பட்ட பெண்ணை காப்பாற்றிய அரசு உயிர் காப்பாளர்
மாமல்லபுரம் கடலில் 20 மீட்டர் தூரத்திற்கு ராட்சத அலையில் அடித்து செல்லப்பட்ட பெண்ணை நீந்தி சென்று காப்பாற்றி, தனது பணியை திறம்பட செய்து அரசு உயிர் காப்பாளர்...
மாமல்லபுரம் கடலில் 20 மீட்டர் தூரத்திற்கு ராட்சத அலையில் அடித்து செல்லப்பட்ட பெண்ணை நீந்தி சென்று காப்பாற்றி, தனது பணியை திறம்பட செய்து மனிதநேயத்தை வெளிப்படுத்திய அரசு உயிர் காப்பாளர்... திருமணத்திற்கு வந்த போது பொழுதை கழிப்பதற்காக கடலுக்கு சென்று அலையில் குளித்தபோது புதுக்கோட்டை பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்! புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் திருமணத்திற்காக இன்று மாமல்லபுரம் வந்தனர். திருமணம் முடிந்தவுடன் பொழுபோக்கிற்காக மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்த்த குடும்பத்தினர். பிறகு கடற்கரைக்கு சென்றனர். அங்கு கடலில் சிலர் குளித்தனர். அதில் சத்தியா (வயது51) என்ற பெண்மணி தனது உறவினர்களுடன் கரை ஓரத்தில் குளித்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ராட்சத அலையில் 20 மீட்டர் தூரத்திற்கு கடலுக்கு இழுத்து செல்லப்பட்டார். அவர் புடவை கட்டி இருந்ததால் அவரால் ராட்சத அலையின் பிடியில் இருந்து மீண்டு கரைக்கு திரும்ப முடியாமல் உயிருக்கு போராடினார். அப்போது கரையில் இருந்த அவரது உறவினர்கள் அவரை காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டனர். பிறகு தமிழக அரசு மூலம் நியமிக்கப்பட்ட அரசு உயிர்காப்பாளர் ராஜி என்பவருக்கு அங்குள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர் கடற்கரையின் ஒரு பகுதியில் இருந்த அவர் அங்கு விரைந்து வந்து கடலில் 20 மீட்டர் தூரத்திற்கு நீந்தி சென்று, ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்த சத்தியாவை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். அங்கு சிறிது நேரம் மயக்க நிலையில் காணப்பட்ட அவர் (சத்தியா) பிறகு மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பினார். சில நிமிடங்கள் தாமதித்திருந்தாலும் சத்தியாவின் உயிர் போயிருக்கும் என்றும், அவரை காப்பாற்றிய அரசு உயிர்காப்பாளர் பணியாளர் ராஜிக்கு (வயது45) (மீனவர்), அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்து மீண்டும் புதுக்கோட்டைக்கு புறப்பட்டு சென்றதை காண முடிந்தது. இதற்கிடையில் ராட்சத அலையில் அடித்து செல்லப்பட்ட புதுக்கோட்டை பெண்ணை காப்பாற்றி, தனக்கு வழங்கப்பட்ட பணியை சரியான முறையில் செய்து, தனது மனித நேயத்தை வெளிப்படுத்திய உயிர்காப்பாளர் ராஜிவை மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, தீயணைப்பு துறை உதவி அலுவலர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.