மலைப்பாதையில் பி.எஸ்.என்.எல். வாகனம் சிக்கி தவிப்பு!
அணைக்கட்டு அருகே மலைப்பாதையில் வாகனம் சிக்கி கொண்டது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவுக்கு உட்பட்ட பீஞ்சமந்தையில் இருந்து குண்டுராணிவரையிலான வனச்சாலை மிகவும் மோசமாக பழுதடைந்துள்ளது. இதனால் சாலாத்துகொல்லை, எள்ளுபாறை, எலந்தம்புதூர், குண்டுராணி, தோனியூர், எழுதிமரத்தூர் ஆகிய கிராமங்களில் இருந்து பயணிக்கும் பள்ளி பிள்ளைகள் மற்றும் மலைவாழ் மக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். இந்த நிவையில் ஜார்தான்கொல்லைக்கும், பீஞ்சமந்தைக்கும் இடையிலான வனச்சாலை மழையின் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு பல இடங்களில் இருசக்கர வாகனங்களில்கூட பயணிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவசரகாலத்தில் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும்போது குழிகள், பாறைகள் நிறைந்த பாதையில் சிக்கிக்கொள்கிறது. இந்த நிலையில் ஜார்த்தான்கொல்லை மலைப்பகுதியில் பி.எஸ்.என்.எல். டவரில் ரிமோட் ரேடியோ யூனிட்அமைப்பதற்காக பொருட்களை எடுத்துச்சென்ற வாகனம் பாதையில் சிக்கிக்கொண்டது. மிகவும் கஷ்டப்பட்டு தள்ளி வாகனத்தை இயக்கினர்.