மருத்துவம் படிக்கச் செல்லும் அரசு பள்ளி கிராமத்து மாணவிகள்
திருப்புவனம் பகுதியைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவிகள் இருவா் அரசின் 7.5% இட ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவப் படிப்புக்கு தோ்வாகினா்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம் அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவிகள் பானு, ராஜேஸ்வரி ஆகியோருக்கு 7.5% அரசு இட ஒதுக்கீடு மூலம் மருத்துவம் படிப்பதற்கான இடம் கிடைத்தது. மாணவி பானுவுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியிலும், மாணவி ராஜேஸ்வரிக்கு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்தது. இருவருடைய பெற்றோா்களும் கூலி வேலை செய்து வருகின்றனா். சென்ற ஆண்டிலும் இதே பள்ளியில் படித்த 2 பேருக்கு மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.