மின்னணு பரிவர்த்தனை மூலம் விவசாயிகள் இடுபொருட்கள் பெற்றிட சிறப்பு ஏற்பாடு
சிவகங்கை மாவட்டம், வேளாண்மை விரிவாக்க மையங்களில், மின்னணு பரிவர்த்தனை மூலம் விவசாயிகள் இடுபொருட்கள் பெற்றிட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவைப்படும் விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் மற்றும் இதர இடுபொருட்கள் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், தற்போதுள்ள சூழ்நிலையில் மின்னணு பரிவர்த்தனை மூலம் பல்வேறு பொருட்கள் வாங்கும் நிலையில், விவசாயிகளும் ATM அட்டைகள், G-Pay, Phonepay மூலமும் தாங்கள் விரும்பும் இடுபொருட்களை வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் பெற்றிட மாவட்டத்திலுள்ள 12 வேளாண்மை விரிவாக்கமைங்களுக்கும் POS இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.மேலும், இதுவரை 15.89 லட்சம் மதிப்பிலான இடுபொருட்களை விவசாயிகள் POS மூலமாக எளிய முறையில் பெற்றுள்ளனர். தற்போது, பருவகாலம் தொடங்கி விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு சென்று இடுபொருட்கள் வாங்கி வருகின்றனர். அவ்வாறு வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு செல்லும் விவசாயிகள் POS இயந்திரம் மூலம் எளியமுறையில் பணம் செலுத்தி இடுபொருட்களை பெறலாம். விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் மின்னணு பரிவர்த்தனை மூலம் இடுபொருட்களை பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.