அறந்தாங்கி அருகே ஓட்டலில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்தனர். அறந்தாங்கியை அடுத்த வல்லவா ரியில் ஓட்டல் நடத்தி வருபவர் ஞான சேகரன்(42). ஓட்டல் புரோட்டா மாஸ்டர் சுரேஷ்(42). இவர்கள் இருவரும் சம்பவத்தன்று ஓட்டலில் இருந்தபோது, சாப்பிட வந்த உடையார்கோவில் கருவட்டான்குடியை சேர்ந்த ஜான் என்ப வர் ஆம்லேட் கேட்டார். இதில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த பிரச்னை தொடர்பாக நேற்று முன்தினம் ஜான் உட்பட 8 பேர் ஓட்டலுக்கு வந்து ஞானசேகர் மற்றும்- சுரேசை தாக்கினர். இதை பார்த்த அதே பகுதியை சேர்ந்த பிரபு(24) என்பவர் தகராறை விலக்கி விட்டார். அப்போது 8 பேரும் சேர்ந்து பிரபுவையும் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த பிரபு சிறிது நேரத் தில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து பிரபுவின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர் பாக போலீசார் விசாரணை நடத்தி கருவட்டான்குடியை சேர்ந்த ஜான்(38), டேவிட்(32), ஜான்மில்டன்(30), பட் டுக்கோட்டை விக்கி(26),வெள்ளுர் சிறுவரை அஜித்குமார்(24), கோட்டக்குடி கார்த்திக்(28), கைகாட்டி சிலம்ப ரசன்(26) ஆகிய 8 பேரை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.