தமிழ்நாடு நில அளவையர் துறை அலுவலர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்
திண்டுக்கல் வேப்பந்தோப்பு தெருவில் உள்ள மாவட்ட அரசு அலுவலர் ஒன்றிய கட்டிடத்தில் தமிழ்நாடு நில அளவையர் துறை அலுவலர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்
திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள திண்டுக்கல் மாவட்ட அரசு அலுவலர் ஒன்றிய கட்டிடத்தில் இன்று தமிழ்நாடு நில அளவையர் துறை அலுவலர் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் பயிற்சி பட்டறை மாவட்ட தலைவர் முகமது முபாரக் தலைமையில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல், தேனி,மதுரை, கரூர்,நாமக்கல் ,சேலம், மயிலாடுதுறை ,கோவை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட நில அளவையர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கு பெற்றிருந்தனர். இவர்களுக்கு கூட்டத்தில் நில அளவை குறித்த பயிற்சி நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நில அளவையர்துறை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் மகேந்திர குமார் கூறுகையில்..., 502 குறுவட்ட அளவர் பணியிடங்களை தரம் இறக்கப்பட்டுள்ளதால் இன்று குறுவட்ட அளவர் பதவி உயர்வுக்கு தகுதி பெற்றிருந்தோம் பதவி உயர்வு பெற முடியாமல் பல நில அளவர்கள் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர் ஆகவே தமிழக அரசு இதனை கவனத்தில் கொண்டு இனியும் காலம் தாழ்த்தாமல் தரம் இறக்கப்பட்ட பணியிடங்களை தரம் உயர்த்தி அரசாணை வெளியிட வேண்டும் என்றும் விடுமுறை தினங்களில் நடைபெறும் ஆய்வுக் கூட்டங்கள் மேலதிகாரிகளின் புலத் தணிக்கை ஆகியவைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் அலுவலக நேரம் காலை 10 மணி முதல் மாலை 5:45க்கு மேல் பெண் பணியாளர்கள் அலுவலகப் பணியில் அல்லது ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வலியுறுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் நில அளவைத் துறையில் உள்ள களப்பணியாளர்களின் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் மென்பொருள் பயன்பாடு களப்பணியில் அதிகரித்துள்ளதால் அதன் தரத்தை மேம்படுத்த வேண்டும் மேலும் அனைத்து நில அளவர்களுக்கும் லேப்டாப் மற்றும் டிஜிபிஎஸ் கருவி வழங்கினால் பட்டா மாறுதல் பணிகளை விரைவுப்படுத்த இயலும் என்பதால் இயக்குனர் அவர்கள் உடனடியாக அனைவருக்கும் லேப்டாப் மற்றும் டிஜிபிஎஸ் கருவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 15 கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அப்படி நிறைவேற்றாத பட்சத்தில் சென்னையில் உள்ள இயக்குனர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளார்.