நிலம் கையகப்படுத்துவதில் இரு சமுதாயத்தினர் இடையே போட்டி

எடப்பாடி அருகே அருந்ததியர் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை மாற்று சமுதாயத்தினர் ஆக்கிரமிப்பு செய்ததை தடுத்ததால் பரபரப்பு.

Update: 2024-08-26 13:13 GMT
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவடத்தூர் கிராமம்,எல்லை விநாயகர் கோவில் அருகில் பாரகலூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான  5.50 ஏக்கர் பொறம்போக்கு நிலத்தை 1999 ஆம் ஆண்டு அப்பகுதியில் வசிக்கும் அருந்ததியர் மக்களுக்கு ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கட்டிநாய்க்கன்பட்டியை சேர்ந்த ஆதிதிராவிடர் உள்ளிட்ட மாற்று சமுதாயத்தினர் சிலர் அருந்ததியர் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதற்கு அந்த நிலைத்தை சீரமைத்துள்ளனர்.  இதனையறிந்த அருந்ததியர் மக்கள் இந்த நிலம் தங்களுக்காக ஒதுக்கப்பட்டது எனவும் இந்த இடத்தில் யாரும் ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டு பதிலுக்கு அருந்ததியர் மக்களும் குடிசை அமைப்பதற்கு ஏற்பாடு செய்தனர். இதனையறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரண்டு தரப்பினரையும் சமாதானம் செய்து  இந்த இடம் யாருக்கு என அரசு ஒதுக்கிய பிறகு ஆக்கிரமிப்பு செய்ய வேண்டும் என க் கூறி அனைவரையும் அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ...

Similar News