மோகனூர் ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி திட்டப் பணிகளை ராமலிங்கம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

மோகனூரில் நான்கு ஊராட்சியிகளில் ரூ. 164.49 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

Update: 2024-08-26 14:48 GMT
நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றிய பகுதிகளில் தமிழ்நாடு முதலமைச்சரின் கிராமசாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சிதுறை மூலம் 2024-25 திட்டத்தில் ஆரியூர்ஊராட்சி.,நெய்காரன்பட்டியிலிருந்து. சுகர்மில்-தோளூர்சாலை.வழி ஆலாம்பள்ளம் 1.660,கிமீ. ஒருவந்தூர் ஊராட்சி. கணபதிபாளையம்- ஒருவந்தூர் செல்லும் சாலை.0.750கிமீ.பரளி ஊராட்சி. கங்காணிபட்டி செல்லும் சாலை.0.790 கிமீ குமரிபாளையம் ஊராட்சி. சங்கரம்பாளையம்-ஓடப்பாளையம் சாலை.0.910 கிமீ ஆகிய நான்கு ஊராட்சியிகளில் ரூ. 164.49 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை, நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு மோகனூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர். சரஸ்வதி கருமண்ணன் முன்னிலையில்,நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் எம்எல்ஏ கலந்து கொண்டு சாலை மேம்பாட்டு பணியினை ஆரியூர்-நெய்காரன்பட்டி, பரளி-கங்காணிபட்டி ஆகிய இரு இடங்களில் பூமிபூஜை செய்து பணியைதொடக்கி வைத்தார். இதில் நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனரும்,மோகனூர் கிழக்குஒன்றிய செயலாளருமான, பெ.நவலடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள். கைலாசம் (ஒருவந்தூர்) ராஜா கண்ணன் (ஆரியூர் ) ஆரியூர் ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.

Similar News