நவீன சலவையகங்கள் மற்றும் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க வாய்ப்பு

சிவகங்கை மாவட்டம், நவீன சலவையகங்கள் மற்றும் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க விருப்பமும், தகுதியும் உள்ள குழுவினர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்

Update: 2024-08-27 10:35 GMT
சிவகங்கை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினரின் பொருளாதாரத்தை முன்னேற்றும் விதமாக நவீன சலவையகங்கள் அமைக்க மற்றும் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க தமிழக அரசு நிதி உதவியுடன் புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும், நவீன சலவையகம் அமைப்பதற்கு தேவையான இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பிற முன் நிகழ்வுகளுக்கு தேவையான நிதியில் ரூ.3.00 லட்சம் மானியமும் வழங்கப்படும், ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைப்பதற்கு தேவையான இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பிற முன் நிகழ்வுகளுக்கு தேவையான நிதியில் ரூ.3.00 லட்சம் மானியமும் வழங்கப்படும். மேற்கண்ட திட்டங்களின் கீழ் விண்ணப்பிக்க 10 நபர்கள் கொண்ட ஒரு குழுவாகவும், குழு உறுப்பினர்களின் ஆண்டு வருமானம் ரூ.1.00 லட்சத்திற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். பயன்பெற விருப்பமும், தகுதியும் உள்ள குழுவினர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Similar News