ரயில் நிலையத்தில் சென்ற மாட்டின் உரிமையாளர் மீது வழக்கு
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் அணிவகுத்து சென்ற மாட்டின் உரிமையாளர் மீது வழக்கு
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 4 வது பிளாட்பாரத்தில் 10க்கு மேலான மாடுகள் அணிவகுத்து சென்றன. மாடுகள் அணிவகுப்பால் பயணிகள் அங்கும் இங்கும் சிதறி ஓடினர். தொடர்ந்து மாநாடுகள் சாணம் மற்றும் கழிவுகளை பயணிகள் நடக்கும் பிளாட் பாரங்களில் விட்டுச் சென்றன. இதில் நடந்து சென்ற பயணிகள் பல வலுக்கி விழுந்தனர். சில பயணிகள் புகார் புத்தகத்தில் எழுதி வைத்து சென்றனர். ரயில்வே ஸ்டேஷனைமேய்ச்சல் தளமாக மாடு வளர்ப்பவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மாடுகள் அணிவகுத்து செல்வதைபார்த்த ரயில் பயணிகள் அச்சத்துடன் அங்கும் இங்குமாய் சிதறினர்.திண்டுக்கல் ரயில்வே பாதுகாப்பு படையினர் மாடுகளை பின் தொடர்ந்து ஒத்தக்கண்பாலம் பகுதியில் உள்ள மாடுகளின் உரிமையாளரை கண்டு பிடித்தனர். அவர்மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.