ஜேசிபி வாகனம் மோதி கூலித் தொழிலாளி பலத்த காயம்
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
விருத்தாசலம் அடுத்த மங்கலம் பேட்டை அருகே உள்ள சித்தேரி குப்பம் கிழக்கு தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் வீரமணி (வயது.34) கூலி வேலை செய்து வருகிறார். மதிய உணவு சாப்பிடுவதற்காக மாத்தூரில் இருந்து சித்தேரிகுப்பத்திற்கு இருசக்கர வாகனத்தில், மாத்தூர் அருணாச்சலம் ஏரி ஓடை அருகே வந்தபோது, அந்த வழியாக ஜேசிபி வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் ஒலி எழுப்பாமல், அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் வந்து வீரமணி மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த அவர், சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையிலும், பின்னர், மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.