தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் ஏடுகள் குழுவினர் ஆய்வு
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் ஏடுகள் குழுவினர் கொடைக்கானல் ஹால்டன் ஹோட்டலில் உயர் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் ஏடுகள் குழு தலைவர் மற்றும் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இலட்சுமணன் தலைமையில், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில் நடைபெற்ற திட்டப்பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து, கொடைக்கானல் ஹோட்டல் ஹால்டனில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வுக்கூட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் ஏடுகள் குழு உறுப்பினர்கள் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் (எ) ஜான் எபினேசர், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல்கந்தசாமி, சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் மற்றும் சட்டமன்றப் பேரவை இணைச் செயலாளர்(பதிப்பாளர்) பூபாலன், துணைச்செயலாளர் சாந்தா உட்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலுடன், மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் ஏடுகள் குழு, திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் தொடர்பாக துறைகளின் ஆண்டறிக்கையை உரிய நேரத்தில் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதற்காக 2 நாட்கள் ஆய்வுப் பயணம் மேற்கொண்டுள்ளது. திண்டுக்கல், பழனி ஆகிய பகுதிகளில் நேற்று(28.08.2024) கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.