முதியவரை கட்டையால் தாக்கிய வாலிபர்கள்
வாலிபர்களை கைது செய்த பல்லடம் போலீசார்
பல்லடம் கொசவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மதன்லால்.அதே பகுதியை சேர்ந்த இரண்டு வாலிபர்களுக்கும் மதன்லாலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது வாக்குவாதம் முற்றிய நிலையில் அருகில் இருந்த கட்டையை எடுத்து வாலிபர்கள் இருவரும் மதன்லாலை கடுமையாக தாக்கினார்.இதில் படுகாயம் அடைந்த அவர் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அதனை அடுத்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த குரு,சூர்யா ஆகிய இருவரும் முதியரை தாக்கியது தெரிய வந்தது.இதனை அடுத்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர்.