விருத்தாசலம் அருகே மணவாளநல்லூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் மனுக்களை பெற்றார்
விருத்தாசலம் அருகே உள்ள மணவாளநல்லூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு மணவாளநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் நீதிராஜன் தலைமை தாங்கினார். கோட்டாட்சியர் சையத் மெக்மூத், திமுக ஒன்றிய செயலாளர்கள் கனக கோவிந்தசாமி, வேல்முருகன், ஒன்றிய சேர்மன் மலர் முருகன், துணை சேர்மன் பூங்கோதை, தாசில்தார் உதயகுமார், சமூக நல தாசில்தார் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இப்ராஹிம், மோகனாம்பாள், திமுக ஒன்றிய துணை செயலாளர் தர்ம மணிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விருத்தாசலம் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். இதில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, எரிசக்தி துறை தமிழ்நாடு மின்சார வாரியம், வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை பொறியியல் துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். இதில் மணவாளநல்லூர் கோமங்கலம், சாத்துக்குடல் கீழ் பாதி, சாத்துகுடல் மேல் பாதி, க.இளமங்கலம், புதுக்கூரைப்பேட்டை, குப்பநத்தம், சின்ன கண்டியாங்குப்பம், கச்சராயநத்தம், நறுமணம் ஆகிய 10 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர். மேற்கண்ட ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.