மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை முயற்சி சிகிச்சை பழனின்றி பலி.
பரமத்தி வேலூர் அருகே மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை முயற்சி சிகிச்சை பழனின்றி பலி போலீசார் விசாரணை.
பரமத்திவேலூர்,ஆக.30- நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு, நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கபிலன்(45). கூலித் தொழிலாளி. இவரது மனைவி பிரியா(38). இவர்களுக்கு திருமணமாகி 16 வருடங்களாகிறது. மேல் 16 வயதில் ஒரு மகள் உள்ளார். கபிலன் அடிக்கடி மது அருந்தி வந்ததன் காரணமாக கபிலனுக்கும் மனைவி பிரியாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கணவரை விட்டு பிரிந்து பிரியா கடந்த 10 வருடங்களாக பரமத்தி வேலூர், திருவள்ளூர் சாலை வடக்குத் தெருவில் தனியாக வசித்து வருகிறார். மனைவி தனியாக பிரிந்து வாழ்ந்து வந்ததால் கபிலன் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 23- ஆம் தேதி கபிலனின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது கபிலன் மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டது தெரியவந்தது. அதனையடுத்து அவரை காப்பாற்றி பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 27- ஆம் தேதி சிகிச்சை பலனின்றி கபிலன் உயிரிழந்தார்.கணவர் கபிலன் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை செய்து கொண்டது அவரது மனைவி பிரியா வேலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.