பயிற்சி முடித்த வீரர்களை எல்லை பாதுகாப்பு படைக்கு அனுப்பி வைப்பு
சிவகங்கை: இந்தோ-திபத் எல்லை பாதுகாப்பு காவல் படையின் கூடுதல் இயக்குநர் நிர்பய் சிங் (Nirbhai Singh) தலைமையில் பயிற்சி முடித்த வீரர்களை எல்லை பாதுகாப்பு படைக்கு அனுப்பும் விழா நடைபெற்றது.
சிவகங்கை அருகே இலுப்பக்குடியில் உள்ள இந்தோ-திபத் எல்லை பாதுகாப்பு பயிற்சி மையம் 2011ல் துவங்கப்பட்டு 13 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து பயிற்சி முடித்த சுமார் 10,000 க்கும் மேற்பட்ட வீரர்கள் இதுவரை எல்லை பாதுகாப்பு படைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதன் ஒரு நிகழ்வாக 488 வது பயிற்சி நிறைவு விழாவில் சுமார் 44 வாரங்களாக கடினமான பயிற்சி முடித்த 1084 வீரர்கள் தங்களது பயிற்சியினை நிறைவு செய்து எல்லை பாதுகாப்பு படைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இப்பயிற்சி மையத்தில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு சுழற் கோப்பையும், சான்றிதழையும் சிறப்பு விருந்தினர் ஐஜி நிர்பய் சிங் (Nirbhai Singh) வழங்கி பாராட்டினார் பின்னர் இந்தோ திபெத் எல்லை காவல் படையின் ஐஜி நிர்பய் சிங் (Nirbhai Singh) கூறுகையில் இந்தோ எல்லைக காவல் படை 1962 ல் சீனப் போருக்குப் பின் இந்தியா, சீனா எல்லையில் பாதுகாவலுக்காக துவங்கப்பட்டது முதலாவதாக 4 பட்டாளியன்களில் தொடங்கிய காவல் படை பின்னர் 60 பட்டாளியன்களாகவும் 90 ஆயிரம் வீரர்களை கொண்டுள்ளது. இந்திய சீன எல்லையான ஜம்மு காஷ்மீரின் காரோகரம் என்ற இடத்தில் தொடங்கி அருணாச்சல பிரதேசத்தின் ஜர்செல்லா வரைக்கும் 3 ஆயிரம் 488 கி்மீ வரை செயல்படுகிறது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 9 ஆயிரம் அடி முதல் 18 ஆயிரத்து 700அடி வரையிலும் -40டிகிரி உள்ள சீதோசன நிலையிலும் தனது பணியினை ஆற்றி வருகின்றனர். எல்லை பாதுகாப்பு தவிர மற்ற பணிகளையும் இந்தோ எல்லை காவல் படை செய்து வருகிறது. நக்சலைட்டுகளுக்கு எதிராகவும், ஜனாதிபதி மாளிகை மற்றும் தூதரகங்கள் போன்ற இடங்களிலும் தங்களது பணியை சிறப்பாக செய்து வருகின்றனர் என்றார். அதனை தொடர்ந்து சிவகங்கை இந்தோ-திபத் எல்லை பாதுகாப்பு காவல் படை பயிற்சி மையத்தின் வீரர்கள் தங்களின் சாகசங்களை வெளிப்படுத்தினர். இதில் சிவகங்கை இந்தோ-திபத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தின் டிஐஜி அச்சல் சர்மா, கமாண்டர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.