பொன்னமராவதி அருகே ஆலவயல் பெரிய ஊரணி பகுதியில் எட்டி தொடும் தூரத்தில் மின் கம்பிகள் தொங்குவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால், சாலை ஓரத்தில் நான்கு சக்கர வாகனங்கள் சென்றால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. விபத்து ஏற்படும் முன் தாழ்வாக தொங்கும் கம்பியை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.