செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள்
பள்ளியின் தாளாளர் திவ்யா தொடங்கி வைத்தார்
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் திவ்யா தொடங்கி வைத்து விளையாட்டின் முக்கியத்துவத்தையும் அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் பேசினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கல்வி அலுவலர் துரைப்பாண்டியன் கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதில் கோகோ, கபடி, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கால்பந்து, பூப்பந்து, ஈட்டி எறிதல், குண்டு எறிதல், வில் அம்பு மற்றும் யோகா போன்ற விளையாட்டுகள் நடைபெற்றன. இதில் செந்தில் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர்கள் தங்கராஜு, வைத்தியநாதன், கவிதா தங்கராஜு, பிரதீப், பள்ளியின் முதல்வர் ராமநாதன், விழா ஒருங்கிணைப்பாளர்கள் உடற்கல்வி ஆசிரியர் ஆரோக்கிய அஜித்குமார், மற்றும் வில் வித்தை பயிற்சியாளர் கமலேஷ்வரன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.