திருப்பூரில் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களை போலிசார் சோதனை!
திருப்பூரில் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களை போலிசார் சோதனை செய்தனர்.;
திருப்பூர்: பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள் சோதனை. திருப்பூர் மாநகரில் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள் அதிக அளவில் பயணிப்பதாகவும், இவற்றில் சிலர் போலியாக பிரஸ் என ஸ்டிக்கர் ஒட்டி அதில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவது குறித்து எழுந்த புகாரை தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் லட்சுமி பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்களை சோதனை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து திருப்பூர் புஷ்பா பேருந்து நிறுத்தம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டி வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர் உரிய அடையாள அட்டைகள் இல்லாமலும் போலியாகவும் ஸ்டிக்கர் ஒட்டி இருந்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்கள் ஒட்டி இருந்த ஸ்டிக்கர்களை கிழிக்க வைத்தனர்.