பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ்குமார்.

சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியான சூரிய சக்தியை பயன்படுத்திட அனைவரும் முன்வர வேண்டும். பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேச்சு.

Update: 2024-08-30 11:12 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக விளையாட்டு மைதானத்தில் மாநிலங்களவை உறுப்பினர் இன்று மாவட்ட ஆட்சியர் ச.உமா தலைமையில், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் அவர்கள்,மேயர் .து.கலாநிதி அவர்கள் மற்றும் நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல்பாடு, பராமரிப்பு குறித்த மேளாவை தொடங்கி வைத்து, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ரூ.1.26 கோடி மதிப்பில் 8 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தியை பார்வையிட்டு, பயன்பாட்டிற்கு வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயம் தான் நம் நாட்டின் முதுகெலும்பு, விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பதை என்பதை கருத்தில் கொண்டு விவசாயிகள் தொடர்ந்து விவசாயம் மேற்கொள்ள வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். நம் நாடு மாபெரும் விவசாய உற்பத்தியை மையமாக கொண்ட நாடு. இதன் காரணமாக ஒன்றிய அரசும், நமது மாநில அரசும் விவசாயத்திற்கு முக்கியத்துவம் வழங்கி வருகின்றது. நவீன காலத்திற்கு ஏற்ப விவசாயத்திலும் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களும், வேளாண் கருவிகளும் அதிகளவில் கிடைக்க பெறுகின்றது. இத்தொழில்நுட்பங்களையும், கருவிகளையும் பயன்படுத்தி விவசாயத்தினை மேம்படுத்தி கொள்வது குறித்து விவசாயிகள் விழிப்புணர்வு பெற வேண்டும். அதனடிப்படையில் இன்றைய தினம் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் விவசாயத்திற்கு பயன்படுத்தும் நவீன இயந்திரங்கள், கருவிகள் தொடர்பான காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு அனுபவமுள்ள தொழில்நுட்ப உதவியாளர்கள் மூலம் செயல் விளக்கம் வழங்கப்பட உள்ளது. வேளாண் கருவிகளுக்கு 50 சதவிகிதம் வரை மானியமும் டிராக்டருக்கு ரூ.4.00 இலட்சம் வரை மானியமும் வழங்கப்படுகிறது. விவசாயிகள் சூரிய சக்தியினை அதிகளவில் பயன்படுத்திட மானிய விலையில் சோலார் பேனல் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியான சூரிய சக்தியை பயன்படுத்திட 2 ஆண்டுகளில் 50 சதவிகித இலக்கினை எய்திட திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. தமிழ்நாடு முலமைச்சர் தமிழ்நாட்டில் உள்ள கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கால்நடை மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் 20.08.2024 அன்று 200 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் சேவையை தொடங்கி வைத்தார்கள். நாமக்கல் மாவட்டத்திற்கு 8 ஊர்திகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் மூலம் தொலைதூர கிராமங்களுக்கும், கால்நடை மருந்தகங்கள் இல்லாத கிராம பகுதிகளுக்கும், கால்நடை மருத்துவ சேவைகளை அந்தந்த இடத்திலேயே வழங்கிடவும், அப்பகுதியில் வசிக்கும் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பசு மற்றும் எருமைகளுக்கு செயற்கைமுறை கருவூட்டல். ஆடு மற்றும் கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை. கால்நடைகளுக்கு தடுப்பூசி, சினை ஆய்வு, சினை பிடிக்காத மாடுகளுக்கு சிகிச்சை கால்நடை மருத்துவ முகாம்களில் கலந்து கொள்ளுதல். கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பங்கேற்று உதவுதல் போன்ற சேவைகள் மேற்கொள்ளப்படும். இந்நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் காலை 8.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை குறிப்பிடப்பட்ட வழித்தடங்களுக்கு சென்று கால்நடைகளுக்கு தேவையான சேவைகள் வழங்கவும், மாலை 2.00 மணி முதல் 5.00 மணி வரை 1962 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டால், அவசர அழைப்புகளை கால்நடைகளுக்கு ஏற்று சிகிச்சை அளிக்கவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்திற்கு ஏற்கனவே 1 மருத்துவ ஊர்தியும், இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ள 8 ஊர்திகளையும் சேர்த்து மொத்தம் 9 மருத்துவ ஊர்திகளின் சேவையினை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெற வேண்டும்.கலைஞர் ஒரு மாற்றுத்திறனாளிகள் கூட துன்பம் அடைய கூடாது என்று மாற்றுத்திறனாளி என புதிய பெயரை அளித்தவர் ஆவார். உடல் குறைபாடாக இருக்கலாம் ஆனால் உள்ள குறைபாடு இல்லை அறிவு குறைபாடு இல்லை என்பதை உணர்ந்து போற்ற வேண்டும். மாற்றுத்திறனாளிகள் கடவுளின் குழந்தைகள். எனவே அவர்களை சிறப்பு கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும். இதனடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினை தனது கட்டுப்பாட்டில் வைத்து மாற்றுத்திறனாளிகள் நலன் காக்க ஓய்வூதியம், உதவித்தொகை, உபகரணங்கள், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள். மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையை பெற்றிட வேண்டும். இந்த அடையாள அட்டை இருந்தால் மட்டுமே பேருந்தில் இலவச பயண சலுகை உள்ளிட்ட அனைத்து அரசு நலத்திட்ட உதவிகளையும் பெற இயலும். எனவே, நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் அடையாள அட்டை பெறும் வகையில் முகாம்களை தொடர்ந்து நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, அரசின் திட்டங்களை அனைவரும் பயன்படுத்தி கொண்டு தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தெரிவித்தார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 81 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.27.85 இலட்சம் மதிப்பில் தங்க நாணயம், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மாடுலர் ரீடிங்க் டிவைஸ், திறன்பேசி, தையல் இயந்திரம் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளையும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 1 விவசாயிக்கு ரூ.5.55 இலட்சம் மதிப்பில் மஹேந்திரா டிராக்டரை ரூ.2.77 இலட்சம் அரசு மானியத்தில் வழங்கினார். மேலும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ரூ.1.26 கோடி மதிப்பில் 8 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தியை பார்வையிட்டு, வாகனத்தில் பயன்படுத்தும் வகையில் உபகரணங்களை பயன்பாட்டிற்கு வழங்கினார். முன்னதாக, வேளாண்மைத்துறை சார்பில் விவசாயத்திற்கு பயன்படுத்தும் நவீன இயந்திரங்கள் / கருவிகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் செ.பூபதி, 1-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சீ.சத்தியவதி, அட்மா குழுத்தலைவர் பழனிவேல், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் .ப.முருகேசன், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவ சி.நாராயணன், கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் க.பா.அருளரசு, வேளாண்மை இணை இயக்குநர் (பொ) திருமதி ப.கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) (பொ) .க.இராமச்சந்திரன், இளநிலை மறுவாழ்வு அலுவலர் .ரா.பிரகாஷ், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாய பெருமக்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News