கண் தானம் பற்றிய விழிப்புணர்வு பேரணி

நகர் மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் தொடங்கி வைத்தார்

Update: 2024-08-30 11:18 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருத்தாசலம் ரோட்டரி சங்கம், ஆண்டனி பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய கண் தானம் பற்றிய விழிப்புணர்வு பேரணி விருத்தாசலத்தில் நடந்தது. ரோட்டரி சங்கத் தலைவர் ஆனந்தா லாட்ஜ் உரிமையாளர் அசோக் குமார் தலைமை தாங்கினார். திட்ட தலைவர் ஜெயின் ஜுவல்லரி உரிமையாளர் தீபக் சந்த் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நகர் மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். விருத்தாசலம் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இயக்குனர் பிரவீனா கண்ணன், மண்டல மேலாளர் சிவசங்கர் நாராயணமூர்த்தி, பள்ளி முதல்வர் லிடியா ஜார்ஜ் ஆகியோர் கலந்துகொண்டு கண் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்கள். இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் சிஎஸ்சி பிரகாஷ், ஆதி பாலி கிளினிக் சம்பத், ஏகே மொபைல் ஜாகிர் உசேன் மற்றும் நிர்வாகிகள், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். முடிவில் ரோட்டரி சங்க செயலாளர் பேராசிரியர் பரமசிவம் நன்றி கூறினார்.

Similar News