கரூர் வீட்டுமனை உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
கரூர் வீட்டுமனை உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
கரூர் வீட்டுமனை உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜவஹர் பஜார் பகுதியில் உள்ள ரவீஸ் கூட்டரங்கில், கரூர் வீட்டுமனை உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தின் பொருளாளர் முத்துராமன், இந்து அறநிலை துறை திருப்பூர் இணை ஆணையரின் ஆணைகளுக்கு மதுரை உயர்நீதிமன்றம் தடை விதித்தது குறித்து விளக்கினார். அதில் வரலாறு ரீதியாக கரூர் நகரம் மற்றும் கிராமம் அரசு இனாம் எஸ்டேட் கிராமமாகும். இந்தியநாடு சுதந்திரம் அடைந்த பின்பு எஸ்டேட்ஸ் ஒழிப்பு சட்டத்தின் கீழ் 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி அரசு ஆணை 2302 படி எடுக்கப்பட்டு, 1963ஆம் ஆண்டு அரசு 3,636- செட்டில்மென்ட் பட்டாக்கள் 52,53,54- என்ற பிளாக் வழங்கப்பட்டு விட்டது. அதேசமயம், இந்து சமய அறநிலைத்துறை அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயில் செயல் அலுவலரும் திருப்பூர் இணை ஆணையரும் 2024 மே 30ஆம் தேதி அன்று அறிவித்த அறிவிப்பில் (10538/2022) நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளின் தாவா செட்டில்மெண்ட், வீட்டு மனைகள் திருக்கோவிலுக்கு சொந்தம் என்று அறிவித்து 30 நாட்களுக்குள் தாவா வீட்டுமனைகளை காலி செய்து திருக்கோவில் வசம் ஒப்படைக்க ஆணையிட்டுள்ளார். இந்த ஆணையினால் பாதிக்கப்பட்டவர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு கோரி 2024 ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்தனர். இது தொடர்பாக ஏற்கனவே சென்னை நில நிர்வாக ஆணையர் அவர்கள், கரூர் மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்யுமாறு ஆணையிட்டுள்ளார். அந்த விசாரணை தற்போது தொடரப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு ஜூலை 26-ம் தேதியில் மதுரை நீதிமன்றம் விசாரணை செய்து ஆணையர் பிறப்பித்த ஆணைகளுக்கு தடை உத்தரவு பிறப்பித்தார்.மேலும், விசாரணையின் போது திருக்கோவில் தங்களுக்கு தாவா நிலங்கள் சொந்தம் என்பதற்காக அரசு எஸ்டேட் ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட செட்டில்மெண்ட் பட்டாக்கள் எதுவும் திருக்கோயில் வசம் இல்லை என்று தெரிவித்ததை நீதிமன்றம் கேட்டு அதிர்ச்சி அடைந்தது. மதுரை உயர்நீதிமன்றம், திருப்பூர் இணை ஆணையரின் ஆணைகளுக்கு தடை விதித்தும், இந்து சமய அறநிலைத்துறை ஆணையரை உடனடியாக விசாரணை செய்து 6- மாதங்களுக்குள் ஆணை பிறப்பிக்குமாறு ஆணையிட்டுள்ளதாக முத்துராமன் தெரிவித்தார்.