கும்பாபிஷேகத்தில் நகை திருட்டில் ஈடுபட்ட ஐந்து நபர்கள் கைது.

திடுமல் மாரியம்மன் கோவில் கும்பாபிசேகத்தில் நகை திருட்டில் ஈடுபட்ட ஐந்து நபர்களை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றன

Update: 2024-08-30 15:52 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பரமத்தி வேலூர், ஆக,30: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள திடுமல் மாரியம்மன் கோவில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி திருத்தம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கு கபிலர்மலை அருகே உள்ள செம்மடையைச் சேர்ந்தவர் ஆறுமுகம் இவரது மனைவி லட்சுமி (70) ஆகியோர் வந்திருந்தனர். இந்த நிலையில் கும்பாபிஷேகத்தில் கூட்டம் அதிக அளவில் இருந்துள்ளது. அப்போது லட்சுமி அணிந்திருந்த 6.5 தங்கச் செயினை கூட்டத்தில் இருந்தவர்கள் யாரோ திருடி விட்டதாக அங்கிருந்து காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். தகவலின் அடிப்படையில் விழாவிற்கு வந்தவர்களிடம் சந்தேகத்தின் பெயரில் இருந்தவர்களை விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அங்கிருந்து காரில் சென்ற ஐந்து பேர்களிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருச்சி மாவட்டம் திருவெறும்புதூர் பூலங்குடியைச் சேர்ந்த ராசாமணி (70),அதே பகுதியைச் சேர்ந்த உமா (57),முத்து (58) பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியைச் சேர்ந்த புவனா (47),அதே பகுதியைச் சேர்ந்த செல்வி (65) ஆகியோர் லட்சுமி அணிந்திருந்த நகையை திருடி சென்றது தெரியவந்தது. மேலும் இந்த ஐந்து நபர்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கும்பாபிஷேக விழாவில் நகை பொரித்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News