தாளவாடியில் இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள்
தாளவாடியில் இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள்
தாளவாடியில் இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள் ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் ஏராயுமா மற்றும் | மல்லன்குழி ஊராட்சிக்கு உட்பட்ட மல்லன்குழி, அருளவாடி மெட்டலவாடி கிராமங்களில் 1986-1987ம் ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட தொகுப்பு வீடுகள் தற்பொழுது மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள தொகுப்பு வீடுகளை பழுது பார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது தாளவாடி பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக தொகுப்பு வீடுகளுக்குள் மழைநீர் சொட்டியபடி உள்ளதால் மேற்கூரையின் மீது தார்பாய்கள் அமைத்து குடியிருந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த மேற்கூரை குடியிருப்போர் மீது இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் மல்லன்குழி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் சுமார் 215 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. ஆனால் மல்லன்குழி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் 20 தொகுப்பு வீடுகள் மட்டுமே பழுது பார்க்கும் பணிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். எனவே 215 வீடுகளுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதுபார்க்கும் பணிக்காக பரிந்துரைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது பற்றி தாளவாடி சமூக ஆர்வலர் மாதேவசாமி கூறுகையில் :- தாளவாடி வட்டத்திற்க்கு உட்பட்ட 10 பஞ்சாயத்துகளில் சுமார் 1000க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் உள்ளன. இதில் 700க்கும் மேற்பட்ட வீடுகள் மிகவும் சேதம் அடைந்து காணப்படுகிறது. ஆனால் 200 வீடுகள் வரை மட்டுமே பழுது பார்க்கும் பணிக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதால் மற்ற வீடுகள் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே துறை சார்ந்த அதிகாரிகள் அனைத்து வீடுகளையும் ஆய்வு செய்து பழுது பார்க்கும் பணிக்காக பரிந்துரைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.