திருப்பூரில் மண் திருட்டில் ஈடுபட்ட லாரியை பிடித்த அமைப்பினர் வாகனத்தை லாரியால் ஏற்றி கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார்!
திருப்பூரில் மண் திருட்டில் ஈடுபட்ட லாரியை பிடித்த அமைப்பினர் வாகனத்தை லாரியால் ஏற்றி கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
திருப்பூரில் மண் திருட்டில் ஈடுபட்ட லாரியை பிடித்த தன்னாரவ அமைப்பினரின் வாகனத்தை லாரியால் ஏற்றி கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தன்னார்வலர்கள் காவல் நிலையத்தில் புகார். மண் அள்ளியவர்களுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் காவல் நிலையம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் ஊத்துக்குளி சாலை மன்னரைப் பகுதியில் சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறை கொட்டி வைத்திருந்த மண்ணை 4 லோடு ஏற்றிச் சென்ற நிலையில் 5 வது லோடு ஏற்றி திருட முயன்ற வாகனத்தை தனியார் தன்னார்வ அமைப்பினர் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த லாரி ஓட்டுனர் குறுக்கே நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை இடித்து தன்னார்வ அமைப்பினரை தாக்கி செல்போனை பறித்துள்ளனர். சம்பவம் அறிந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மற்றும் மாநகராட்சி வந்த நிலையில் மண்ணை கொட்டிவிட்டு லாரியுடன் தப்பிச் சென்றனர். இந்த நிலையில் மண் அள்ளியவர்கள் மிரட்டல் விடுத்து சென்றதால் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை எனவும் பாதுகாப்பு வழங்க கோரி தன்னார்வ அமைப்பினர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அதிகாரிகள் தரப்பில் மண் அல்ல அனுமதி வழங்கவில்லை என தெரிவித்த நிலையில் மண் எங்கு கொண்டு செல்லப்பட்டது. யார் அனுமதி அளித்தது என போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது மண் கடத்தலில் ஈடுபட்ட நபர்களுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் காவல் நிலையத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியதால் காவல் நிலையத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.