நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி அமைச்சர்  துவக்கி வைத்தார்

நாகர்கோவிலில்

Update: 2024-08-31 15:03 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழகத்தில் தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கால்நடை நலம் மற்றும் நோய் கட்டுப்பாட்டு பிரிவில் பெறப்பட்ட 245 வாகனங்களை கொண்டு கால்நடை நலப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. தமிழ்நாட்டில் மேற்கண்ட திட்டத்திற்கான பெறப்பட்ட வாகனங்களை தமிழக முதல்வர் அவர்களால் கடந்த 20 ம் தேதி அன்று நடமாடும் கால்நடை மருத்துவப்பணிக்கு அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கினார்.         இதில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இரண்டு வாகனங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த இரு வாகனங்களையும் நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று (31 -ம் தேதி) கொடியசைத்து துவக்கி வைத்தார்.        இந்த வாகனங்கள் நாகர்கோவில் மற்றும் தக்கலை கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநர் கோட்டங்களில் செயல்படுத்தப்படவுள்ளன. மேற்கண்ட நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களில் ஒரு கால்நடை உதவி மருத்துவரும் ஒரு உதவியாளரும் பணியிலிருப்பர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா மாநகராட்சி மேயர் மகேஷ் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Similar News