கொல்லங்குடி வெட்டுடையார் காளிகோயில் கும்பாபிேஷகம்
சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடி வெட்டுடையார் காளிகோயில் கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது.
சிவகங்கை அருகே கொல்லங்குடி வெட்டுடையார் காளிகோயில் கும்பாபிேஷகம் செப்.,8ம் தேதி நடைபெற உள்ளது. ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட கொல்லங்குடி வெட்டுடையார் காளி கோயில், புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. புனரமைப்பு பணிக்கு பின் செப்.,8ல் கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது. இக்கோயிலில் செப்., 4ம் தேதி காலை 9:45 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் கும்பாபிேஷக பூஜை துவங்குகிறது. அன்று மாலை 4:30 மணிக்கு வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் நடைபெறும். செப்., 5 அன்று காலை 7:35 மணிக்கு புனித தீர்த்தங்களை ஊர்வலமாக எடுத்து வருதல், மாலை 4:15 மணிக்கு கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், கடஸ்தாபனம், முதல் கால வேள்வி நடைபெறும். செப்.,6 ம் தேதி காலை 8:15 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜை துவங்கும். மங்கள இசை, திருமுறை பாராயணங்கள் நடைபெறும். அன்று மதியம் 12:05 மணிக்கு மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெறும். மாலை 4:30 மணிக்கு மூன்றாம் கால வேள்வி, இரவு 8:15 மணிக்கு மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெறும். செப்.,7 அன்று காலை 8:35 மணிக்கு நான்காம் கால வேள்வி, காலை 11:45 மணிக்கு மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெறும். மாலை 4:30 மணிக்கு ஐந்தாம் கால வேள்வி பூஜைகள் நடைபெறும். செப்.,8ம் தேதி காலை 6:15 மணிக்கு ஆறாம் கால வேள்வி, மங்கள இசை, மண்டப சாந்தி, கோபூஜை நடைபெறும். அன்று காலை 10:45 முதல் 11:45 மணிக்குள் கோபுர கலசங்களில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிேஷகம் நடத்தி வைக்கின்றனர். தொடர்ந்து மகா அபிேஷகம், தீபாராதனை நடைபெறும். அன்று மாலை 6:15 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் வெட்டுடையார் காளி திருவீதி உலா வருவார். ஹிந்து அறநிலையத்துறை தக்கார் ஞானசேகரன், செயல் அலுவலர் நாராயணி ஆகியோர் கும்பாபிேஷக ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.