த.வெ.க. கொடிக்கம்பம் ஊன்ற அனுமதி கோரி எஸ்.பி.யிடம் மனு
த.வெ.க. கொடிக்கம்பம் ஊன்ற அனுமதி கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உத்தரவுப்படியும், பொதுச் செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின்படியும் திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், நத்தம், ஆத்தூர், நிலக்கோட்டை பகுதிகளில் கொடிகம்பங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த பகுதியில் கொடி கம்பங்கள் ஊன்றுவதற்கு அனுமதி வழங்க கோரி திண்டுக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் நிர்மல் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் யிடம் மனு அளித்தனர். இதில் தொண்டரணி தலைவர் சஞ்சீவிகுமார், மாணவரணி தலைவர் சுசீந்திரன், வழக்கறிஞர் அணி தலைவர் ஆசிப், தகவல் தொழில்நுட்ப அணி சூர்யா உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.