திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கை ஒருவர் தனது தாயுடன் வந்து தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கை ஒருவர் தனது தாயுடன் வந்து பெட்ரோலை ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றதால் அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கை ஒருவர் தனது தாயுடன் வந்து பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றால் அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மீட்டு அவர்களிடம் விசாரபை மேற்கொண்டு வருகின்றனர் திருப்பூர் கல்லூரி சாலை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரேயா திருநங்கையான இவருக்கும் எதிரே உள்ள குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது இந்த நிலையில் ஸ்ரேயா கடந்த செவ்வாய்க்கிழமை அன்று திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார். அப்போது காவல் நிலையத்தில் திருநங்கைக்கு எதிராக அருகில் இருப்பவர்கள் புகார் அளித்ததால், இதனை எடுத்து அருகில் இருப்பவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு புகாரை காவல் துறையினர் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் தன் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கை ஸ்ரேயா மற்றும் அவரது தாய் தங்கள் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர் அப்போது பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு விசாரித்து வருகின்றனர்